Posts

Showing posts from September, 2017

அய்யப்பன் பாடல் ( ஹரிவராஸனம் )

Image
ஹரிவராஸனம் விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் அறிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணகீர்த்தனம் பக்தமானஸம் பரணலோலுபம் நர்த்தனாலஸம் அருணபாசுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம் ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம் ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா துரகவாஹனம் சுந்தரானனம் வரகதாயுதம் வேதவர்னிதம் குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா த்ரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம் த்ரினயனம்ப்ரபும் திவ்யதேசிகம் த்ரிதசபூஜிதம் சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா பவபயாபஹம் பாவுகாவஹம் புவனமோஹனம் பூதிபூஷனம் தவளவாஹனம் திவ்யவாரணம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம

முருகன் பாடல் ( உனைப் பாடும் தொழிலின்றி )

Image
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே சிற்பச்சிலையாக நிற்பவனே சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே முருகா முருகா உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை அமுதம் இருக்கின்ற பொற்குடமே இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே அமுதம் இருக்கின்ற பொற்குடமே இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே முருகா முருகா உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா முருகா முருகா

அம்மன் பாடல் ( அணுவிற்குள் அணுவும் )

Image
அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ ஆள்கின்ற அரசியும் நீ கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ கருணைக்கு எல்லையும் நீ விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ வேதத்தின் மூலமும் நீ பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ பாருக்கு அன்னையும் நீ அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே அன்புவடி வான உமையே அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற ஆதிசிவ சக்தி தாயே! கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக என்றைக்கு நீ வருவாய்? மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை என்றைக்கு நீ தருவாய்? மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக என்றைக்கு நீ வருவாய்? கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக என்றைக்கு நீ ஒளிர்வாய்? இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு ஒளிஉன்னைத் தேடி வந்தேன் அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற ஆதிசிவ சக்தி தாயே! விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை வழிகாட்ட நீ வருவாய் விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை மருள்நீக்க நீ வருவாய் நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை வளம்சேர்க்க நீ வருவாய் சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்ட

விநாயகர் பாடல் ( விநாயகனே வினைதீர்ப்பவனே )

Image
பல்லவி ======= விநாயகனே வினைதீர்ப்பவனே வேழமுகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினைதீர்ப்பவனே வேழமுகத்தோனே ஞால முதல்வனே சரணம் - 1 ========= குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் (விநாயகனே) சரணம் - 2 ========= உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய் கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினைதீர்ப்பவனே வேழமுகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினைதீர்ப்பவனே

முருகன் பாடல் ( குன்றத்திலே குமரனுக்கு )

Image
பல்லவி ======= குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் சரணம் 1 ======== தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம் தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம் தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை முருகப் பெம்மானை குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் சரணம் 2 ======== உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை குழு: வேல்முருகா வெ

திருமால் பாடல் ( கோபியர் கொஞ்சும் ரமணா )

Image
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா  கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா  கோபியர் கொஞ்சும் ரமணா மாபாரதத்தின் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா  மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா  கோபியர் கொஞ்சும் ரமணா தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா  கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா  கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா  கோபியர் கொஞ்சும் ரமணா ரமணா ரமணா

அய்யப்பன் பாடல் ( இருமுடி தாங்கி )

Image
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்  இருவினை தீர்க்கும் யமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம் பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை  சுவாமியே அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை  சுவாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே நெய் அபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே  ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார்  சபரி மலைக்கு சென்றிடுவார்  (சுவாமியே அய்யப்போ ) கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து  பார்த்த சாரதியின் மைந்தனே உன்னை பர்கவேன்டியே தவமிருந்தேன் (2) இருமுடி எடுத்து எருமேலி வந்து ஒரு மனதாகி பேட்டை துள்ளி  அருமை நண்பராம் வாவரை தொழுது  அய்யனின் அருள் மலை ஏறிடுவீர்  (சுவாமியே அய்யப்போ  ) அழுதை ஏற்றம் ஏறும் பொழுது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்  வழி காட்டிடவே வந்திடுவார், அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்  கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துனைவருவார்  கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார் (சுவாமியே அய்யப்போ )

அம்மன் பாடல் ( நெறஞ்சு மனசு )

Image
நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி - உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி! மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி!நமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி - கண் இமை போல காத்திடுவாள் மகமாயி! உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே - எங்கள் சமயபுரத்தாள் அவளே! இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி! தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி! முந்தை வினைகளைக் களைந்தெறிவாள் தாய் மயிலையிலே, முண்டகக்கன்னி - கோலவிழி பத்திரகாளி! வேண்டும் வரம் தருவாள் என் தாய்....வேற்காட்டுக் கருமாரி!  ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் பாத்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும் காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா நிம்மதியைத் தந்திடுவா வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை தீர்த்திடுவா மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாச் சிரிச்சு நிப்பா தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா மல்லிகைச் சரம் தொடுத்து மாலை இட்டோம் - அரிசி மாவிளக்கு ஏற்ற

சிவன் பாடல் ( ஹர ஹர சிவனே )

Image
மச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனே ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம் அலலே நமச்சிவாயம் கனலே நமச்சிவாயம் காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்த புனிதக்கடலே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா கலியின் தீமை யாவும் நீக்கும் கருணை கடலேப் போற்றி ஹர ஓம் நமச்சிவாயா ஹர ஓம் நமச்சிவாயா புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம் புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ---------------------------------------- நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா சிவனார் கங்கை கரையில் அமர்ந்த சீதழே ஒளியே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா தவமே செய்யும் தபோவனத்தில் ஜோதி லிங்கனே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம் பூதம்

முருகன் பாடல் ( திருச்செந்தூரின் கடலோரத்தில் )

Image
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்! கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா? மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு! பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!