Posts

Showing posts from October, 2017

சிவன் பாடல் ( சிவமயமாக தெரிகிறதே )

Image
ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே... அணலான மலை காண ...மணம் குளிருதே... சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே... சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே... புவணங்கள் ஆளும் அண்ணாமலையே... புவணங்கள் ஆளும் அண்ணாமலையே... எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே... அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே... உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே... அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே... உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே... சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே... யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே... யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா... யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே... யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா... சத்தியம் நீதான்...சகலமும் நீதான்... நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்... அருணாச்சலா...உனை நாடினேன்... அருணாச்சலா...உனை நாடினேன்... சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள... சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா... சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...

விநாயகர் பாடல் ( கணபதியே வருவாய் )

Image
கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே) மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே) ஏழு சுரங்களில் இன்னிசை பாட எங்கணும் இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட (கணபதியே) தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென க­ரென் றொலிக்க ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க உண்மை ஞானம் செல்வம் கொழிக்க (கணபதியே)

முருகன் பாடல் ( அறுபடை வீடு )

Image
அறுபடை வீடு கொண்ட திருமுருகா திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா (அறுபடை) பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை) வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை) ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள் தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை) தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை) குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன் குலமகளாக வரும் நினைவோடு திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை) தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை) கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல காட்ச

அய்யப்பன் பாடல் ( பகவான் சரணம் )

Image
பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமே சரணம் சரணம் ஐயப்பா கரிமலை வாசா பாபவினாசா சரணம் சரணம் ஐயப்பா கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய் சரணம் சரணம் ஐயப்பா மஹி சம்ஹாரா மதகஜ வாகனா சரணம் சரணம் ஐயப்பா சுகுண விலாசா சுந்தர ரூபா சரணம் சரணம் ஐயப்பா ஆறுவாரமே நோன்பிருந்தோம் பேரழகா உன்னைக் காண வந்தோம் பால் அபிஷேகம் உனக்கப்பா பாலனைக் கடைக்கண் பாரப்பா முத்திரை தேங்காய் உனக்கப்பா தித்திக்கும் நாமம் எனக்கப்பா கற்பூர தீபம் உனக்கப்பா-உன் பொற்பத மலர்கள் எனக்கப்பா தேவன் பாதம் தேவி பாதம் சேவடி சரணம் ஐயப்பா நாவினில் தருவாய் கீதமப்பா தேவை உன் திருப்பாதமப்பா நெய்யபிஷேகம் உனக்கப்பா-உன் திவ்ய தரிசனம் எமக்கப்பா தையினில் வருவோம் ஐயப்பா-அருள் செய்யப்பா மனம் வையப்பா பகவான் சரணம் பகவதி சரணம் பகவானே பகவதியே தேவனே தேவியே ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்

அம்மன் பாடல் ( கற்பூர நாயகியே )

Image
கற்பூர நாயகியே ! கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா, பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா, பூவிருந்த வல்லி தெய்வானையம்மா, விற்கோல வேதவல்லி விசாலாட்சி, விழிகோல மாமதுரை மீனாட்சி, சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே, சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி, புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி, நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி, நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி, கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி, காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி, உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி, உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற, அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா, கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா, காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா, சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு, சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும், காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும், பண்ணமைக்கும் நா உன்னயே பாட வேண்டும், பக்தியோடு கை உனையே கூட வேண்டும், எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும், இருப

திருமால் பாடல் ( ஆயர்பாடி மாளிகையில் )

Image
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

சிவன் பாடல் ( சிவலிங்கம் )

Image
அரஹர அரஹர அரஹர லிங்கம் சிவசிவ சிவசிவ சிவசிவ லிங்கம் கருணையின் வடிவே கைலாச லிங்கம் காசினி காக்கும் விசுவ லிங்கம் திருப்பரங் குன்றின் பரங்குன்ற லிங்கம் திருவா னைக்காவில் ஜம்புலிங்கம் ஆடல் புரிந்த கூடல்லிங்கம் அன்பைப் பொழியும் ஆட்கொண்ட லிங்கம் பாடலின் சிறந்த மருதீச லிங்கம் பக்திக் கடலின் திருவீச லிங்கம் வெற்றி நல்கும் செயங்கொண்ட லிங்கம் விண்ணவர் போற்றும் வளரொளி லிங்கம் கற்றவர் ஏற்றும் ஐநூற்று லிங்கம் கண்ணின் ஒளியாம் காளத்தி லிங்கம் சுயம்பாய் வந்த தான்தோன்றி லிங்கம் சொர்க்கம் நல்கும் தேசிக லிங்கம் பயனாம் நயனாம் பசுபதி லிங்கம் பாலைய நாட்டின் சண்டீஸ்வர லிங்கம் புள்ளூர் வாழும் வைத்திய லிங்கம் பொங்கும் மங்கள சங்கர லிங்கம் உள்ளம் உறைந்த பூசலார் லிங்கம் உயர்ந்த மயிலைக் கபாலி லிங்கம் மார்க்கண்டன் காத்த அமுதீச லிங்கம் மாதேவன் வீரசேகர லிங்கம் ஆர்த்துப் போற்றும் காளீஸ்வர லிங்கம் ஆவுடைக் கோவிலின் ஜோதிலிங்கம்

விநாயகர் பாடல் ( காக்கும் கடவுள் )

Image
கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலை தீருமே காக்கும் கடவுள் கணேசனை நினை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருள் துணை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருளே துணை காக்கும் கடவுள் கணேசனை நினை யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள் ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள் காக்கும் கடவுள் கணேசனை நினை நாதமும் போதமும் ஞானமும் ஆனவன் நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன் நாதமும் போதமும் ஞானமும் ஆனவன் நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன் ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன் உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன் காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருளே துணை காக்கும் கடவுள் கணேசனை நினை

முருகன் பாடல் ( தங்கமயம் )

Image
தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும் மாலைகளே அவன் ஈராறு கைகளாம் தாமரையே திங்கள் முகம் அரும்பும் புன்னகையே திங்கள் முகம் அரும்பும் புன்னகையே குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் கருணை மழை பொழியும் கருவிழிகள் அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள் கருணை மழை பொழியும் கருவிழிகள் அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள் அமுதம் ஊறி வரும் திருவடிகள் அமுதம் ஊறி வரும் திருவடிகள் அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள் அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்

அய்யப்பன் பாடல் ( சரணம் )

Image
சுவாமியே........ அய்யப்போ     அய்யப்போ..... சுவாமியே சுவாமி சரணம்..... அய்யப்ப சரணம் அய்யப்ப சரணம்.... சுவாமி சரணம் தேவன் சரணம்..... தேவி சரணம் தேவி சரணம்..... தேவன் சரணம் ஈஸ்வரன் சரணம்.... ஈஸ்வரி சரணம் ஈஸ்வரி சரணம்.... ஈஸ்வரன் சரணம்  பகவான் சரணம்.... பகவதி சரணம் பகவதி சரணம்... பகவான் சரணம் சங்கரன் சரணம்.... சங்கரி சரணம் சங்கரி சரணம்.... சங்கரன் சரணம் பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு கல்லும் முள்ளும்...காலுக்கு மெத்தை காலுக்கு மெத்தை... கல்லும் முள்ளும் குன்டும் குழியும்... கண்ணுக்கு வெளிச்சம் கண்ணுக்கு வெளிச்சம்... குன்டும் குழியும் இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு கட்டும் கட்டு.... சபரிமலைக்கு சபரிமலைக்கு...... கட்டும் கட்டு யாரை காண.... சுவாமியை காண சுவாமியை கண்டால்... மோக்ஷம் கிட்டும் எப்போ கிட்டும்... இப்போ கிட்டும் தேக பலம் தா... பாத பலம் தா பாத பலம் தா... தேக பலம் தா ஆத்மா பலம் தா... மனோ பலம் தா மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா நெய் அபிஷேகம்.... சுவாமிக்கே  சுவாமிக்கே... நெய் அபிஷேகம் பன்னீர் அப

திருமால் பாடல் ( குருவாயூருக்கு வாருங்கள் )

Image
குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கடலும் வானும் அவனே என்பதைக் காட்டும் குருவாயூர்க் கோலம் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு மாலைகள் இடுவார் குறை ஓடி குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம் உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன் அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்

அம்மன் பாடல் ( செல்லாத்தா )

Image
செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள் தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ

முருகன் பாடல் ( அழகென்ற சொல்லுக்கு முருகா )

Image
அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எ

விநாயகர் பாடல் ( பிள்ளையார் சுழி போட்டு )

Image
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு - பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து - பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே - பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு வழியின்றி வேலனவன் திகைத்தான் குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான் வழியின்றி வேலனவன் திகைத்தான் குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான் மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான் மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான் மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் - பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும் அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் - பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும் அஞ்சேலெ

சிவன் பாடல் ( அருணாசலனே ஈசனே )

Image
தணலாய் எழுந்த சுடர் தீபம்  அருணாசலத்தின் சிவ யோகம் ஒளியாய் எழுந்த ஓங்காரம் உன் கோலம் என்றும் சிங்காரம்..... ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே....ஈசனே.... அன்பே சிவமான நாதனே... அருணாசலனே....ஈசனே.... அன்பே சிவமான நாதனே... குருவாய் அமர்ந்த சிவனே.. ஒன்றாய் எழுந்த சிவனே.. மலையாய் மலர்ந்த சிவனே.. மண்ணால் அமர்ந்த சிவனே.. அருணை நிறைந்த சிவனே.. அருளை வழங்கு சிவனே.. அருணை நிறைந்த சிவனே.. அருளை வழங்கு சிவனே.. ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே....ஈசனே.... அன்பே சிவமான நாதனே... அருணாசலனே....ஈசனே.... அன்பே சிவமான நாதனே... ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே..... ஓம் ஓம் ஓம் ஓம்  உன் புகழ் செவிகளில் சேருதே... உள்ளம் பரவசம் ஆகுதே... உன் புகழ் செவிகளில் சேருதே... உள்ளம் பரவசம் ஆகுதே...  நாண் யார் என்றேன்.. நடமிடும் ஈசனே..  நாகாபரணம் சூடிடும் வ